Saturday, December 6, 2014

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 3

1)   கடல் அலைகள்.


ஒன்றன் பின் ஒன்றாக
ஒழுங்கின் கட்டளையில்
அணிவகுக்கும் குழந்தைகள்


2)   உப்புமாவின் கேள்வி

உப்பின் அளவு சுவையோடு
ருசித்து புசித்தது நீங்கள்!
உப்பை சுமப்பது மட்டும் நானா?

3)   களைகள்….


பயிர்களோடு பயிர்களாய்
பாசத்தின் பிணைப்பில்
பந்தமாகி போனது

4)   புது ரூபாய்நோட்டு
  
ஏழை என்று எண்ணாமல்
உன்னிடமும் நான் இருந்திருந்தால்,
இன்று பழையதாகியிருப்பேன்!

5)      பொது நலம்….


உன் நலம் மடிய காரணம்,
உன் மரத்தின் வேர்களின்,
விஷப்பூச்சியாய் சுயநலம்..


படங்கள் : நன்றி ௬குள்



இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்

ஹைக்கூ கவிதைகள் - 1


இன்னும் வளரும்...

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கடலை குழந்தையாக்கியதும் அழகு.

    மாவும் உப்பும் சேர்ந்தாலே அது, உப்பு + மா = உப்புமா

    மலர்களுக்கு உயிர் இருக்கும்போது பாசமும் பந்தமும் இருக்கத்தானே வேண்டும்.

    ஆம் ஏழைக்கு எட்டாக்கனியே 1000 தில் காந்தி.

    பொதுநலவாதியோடு சுயநலக்காரன் பிணைந்தால் காரியம் கெடும்.

    புகைப்படத்திற்க்கு தகுந்தாற்போல் கவி செருக்குகள் கண்டு வியந்தேன் அருமையிலும் அருமை கவிதை வாழ்த்துகள்.

    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் உடனடி வருகைக்கும், கவிதை ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்து அதற்கு தகுந்தாற்போல், பின்னூட்டம் இட்டமைக்கண்டு நானும் வியந்தேன்.கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்துவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      கவிதைக்கு பொருத்தமான புகைப்படங்களை, தேர்ந்தெடுத்தேன்.
      வாழ்த்தியமைக்கும், நன்றி சகோதரரே!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்

      Delete
  3. சூப்பர் குறும் கவிதைகள்....தோழி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்ந நன்றிகள் சகோதரி!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete