Tuesday, May 5, 2015

முருகா! உனையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

இந்த உலகம் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற ரீதியில் இயங்கி வருவதாக இந்து மத புராணங்கள் மெய்படுத்துகின்றன. இதில் படைத்தல் தொழிலை மும் மூர்த்திகளில் முதல்வரான பிரம்மா எல்லா உயிர்களையும் அதன் வினைப் பயன்களைக் கொண்டு மறுபிறவி எடுத்து வாழ்வதற்கான பணிகளை செய்து வந்தார். அவருக்கு படைத்தல் தொழிலில் உதவியாக இருக்க வேண்டி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு மகன்களை தன் மனதிலிருந்து உதிக்க செய்து, மானசீக புத்திரர்களாக உருவாக்கி தான்  படைத்து வரும் பணியில் ஈடுபடுத்த முனைந்தார், ஆனால் அவர்கள் உலகத்தின் மீது எவ்வித பற்றுமின்றி தந்தையின் படைக்கும் தொழில் மேலும் இச்சையின்றி, எந்த விதமான ஆசைகளுமின்றி, ஞான மார்க்கத்தின் மேல் அதீத பிடிப்புடன் தவத்தில் ஈடுபட்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஞானிகளாகி விட்டனர்.

ஒரு நாள் இதில் சனத்குமாரரை தன் மகனாக பிறப்பெடுக்க வைக்கும் நோக்கத்தில் பரமேஷ்வரரும், பார்வதி தேவியும் தவத்தில் ஈடுபட்டிருந்த சனத்குமாரர் முன் தோன்றினார்கள். எவ்வித ஆசைகளின்றி, எவ்வித நோக்கமுமின்றி, தவத்தில்  அமர்ந்திருந்த சனத்குமாரர், இவர்களை கண்ட பின்னும், “நான் இவர்களை வேண்டி தவம் ஏதும் செய்ய வில்லையே இவர்கள் எதற்கு இங்கு வர வேண்டும்?” என்ற சிந்தனையோடு, மீண்டும் ஏதும் பேசாமல் தன் நிஷ்டையை மேலும் தொடர்ந்தார். தங்களை கண்டு விட்டும், காணாதது மாதிரி கண்மூடி அவர் அமர்ந்திருந்த நிலைகண்டு, “சனத்குமாரா.! நீ ஆசைகளற்ற பெரிய மகா ஞானியாயிருக்கலாம். ஆனால் உலகத்தை காத்து ரட்சிக்கும், மாதா பிதாவாகிய நாங்கள் வந்த பின்னும் வாருங்கள்எனக் ௬றி வரவேற்கும் பண்புடன் நடந்து கொள்ளாவிடினும், வந்த நோக்கம் என்னவென்று கேட்காத அளவுக்கு உன் கர்வம் மிகக் ௬டி விட்டதா? என சிவ பெருமான் கோபப் படுவது போல் பேசினார்.
அதற்கு அவர் இந்த உலகத்தில் அனைவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன். அதில் நீங்களும் ஒருவர்தான்! இதில் கர்வம் எங்கிருந்து வந்தது? மேலும், நான் ஏதும் எதிர்பார்த்து தங்களை வேண்டி தவமிருக்க வில்லையே.! அதனால்தான் அமைதியாயிருந்தேன்.” என்று அஞ்சாமல் பதிலுரைக்க, அவர் அஞ்சாமைக்கண்டு உள்ளுக்குள் மகிழ்வுற்ற சிவபெருமான்., “சரி! நாங்கள் வந்தது வந்து விட்டோம். உனக்கு ஏதேனும் வரம் தர பிரியப் படுகிறோம், கேள்! என்ன வரம் வேண்டும்? என்றார்.
  
ஆசைகளின் மிகுதியில் அதை வேண்டினால் அல்லவா இந்த வரம் பெறும் முயற்சிகள் எல்லாம். ! அவர்தான் எந்த ஆசைகளும் இல்லாதவராயிற்றே.! இதைக்கேட்டு சனத்குமாரர் சற்றும் அஞ்சாது நகைத்தார். “வரமா? எனக்கா? நான் விருப்பு வெறுப்புகளற்றவன். எனக்கெதற்கு வரங்கள்.? உங்களுக்கு ஏதாவது வேண்டுமாயின் கேளுங்கள்! அதை வரமாக நான் தருகிறேன். என்றார் சிறிதும் அச்சமின்றி.

அவர் அச்ச படாமல் பேசுவதையோ, பட்டும் படாமல் பேசுவதையோ சிவபெருமான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஒரு நிகழ்வுக்காகத்தான், இந்த வார்த்தையை சனத்குமாரரிடம் பெற வேண்டித்தானே சிவபெருமானும் அங்கு வலுகட்டாயமாக எழுந்தருளியிருக்கிறார்.

எனவே புன்னகையுடன், சரி.! நானே கேட்கிறேன் . நீ என் மகனாக வந்து பிறக்க வேண்டும். அந்த வரத்தை கொடு! என்றார்.
கொடுப்பதை தவிர வேறு ஏதும் பெற்றறியாத சனத்குமாரர் சரி! ஆனால், நீர் மட்டுமே என்னை பெற வேண்டும். ஒரு தாயின் சம்பந்தம் இல்லாமல்தான் நான் பிறக்க வேண்டும். இதோ உங்கள் அருகிலிருக்கும் தாய் உமா தேவியும் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.
ஏதும் கேட்காத போது ஒருவருக்கு எந்த வரமும் தரக் ௬டாது என்கிறது சாஸ்திரம்!. எனவே அந்த தாய் வயிற்றில் கர்ப்பமாக என்னை சுமந்து பெறாமல், நீங்களே என்னை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.
இதைக்கேட்ட பார்வதிதேவி மிகவும் வருத்தமுற்றாள். இதோ பார்.! சனத்குமாரா.!  இது நியாயமேயில்லை.! சிவமும், சக்தியும் சரி பாதிதானே.! ஒரு கணவர் என்பவரின் எண்ணங்களுக்குள் மனைவி என்பவளும் அடக்கந்தானே! என்னையும் உத்தேசித்துதானே அவர் உன்னிடம் வரம் கேட்கிறார். நான் வேறு தனியாக உன்னிடம் வரமாக ஏதாவது கேட்க வேண்டுமா? என்றதும், தாயே! ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது ஒரு நியதி அல்லவா.! முன்னொரு காலத்தில் பஸ்மாசூரனுக்கு உன்கணவர்அவன் கையை யார் தலையில் வைத்தாலும் எரிந்து சாம்பலாகி விடவேண்டும்என அவன் தவமிருந்து கேட்ட வரத்தை அவன் கேட்டவுடன் தந்து விட்டார். அந்த துஷ்டன் உன் கணவரையே சோதித்துப் பார்க்க யத்தனித்தான். அந்த நேரம் உன் கணவர் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைய, நீயோ துக்கத்தில் தண்ணீராய் மாறி சரவண பொய்கை என்ற நீர் நிலையானாய்.! இனி வரும் பொழுதினில் நான் உன் கணவரின் நெற்றிக் கண்ணிலிருந்து தீயின் ஜ்வாலையால் உருவாக, அதை சரவணப் பொய்கையாகிய நீர் நிலையில் உன்னிடமே அவர் சேர்ப்பார். எப்படியும் உன்னிடம்தான், உன் தொடுதலில்தான், நான் வளர்வேன். இப்போது உனக்கு திருப்தியா.? என்றதும், பரமேச்வரனும் பார்வதி தேவியும் அக மகிழ்ந்து அப்படியே ஆகட்டுமெனஆசிர்வதித்து விட்டு வந்த நோக்கம் நிறைவேறிய மகிழ்வில் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின் தன் தந்தை பிரம்மாவை சந்தித்து சனத்குமாரர் விபரங்களைச் சொல்ல, “சனத்குமாரா, நீ எல்லாம் அறிந்தவன்.! நீயோ சென்ற பிறவியில் அசுரர்கள் தேவர்களை துன்புறுத்துவதை வேதங்களில் படித்து மனம் கொதித்து அவர்களை அழிக்க மாட்டோமா? என்று ஆவேசபடுவாய்.! அந்த நிலைக்காக இப்போது உன்னை தன் மகனாக ஏற்று, “மரணம் ஏற்படவே ௬டாது. அப்படியே வந்தாலும் அது சிவனின் குமாரனால்தான் மட்டுமே தன் மரணம் ஏற்பட வேண்டும்என்ற வரத்தைப் பெற்றிருக்கும், பதமாசுரனையும் அவனை சார்ந்த அரக்கர்களையும் வதைக்க உன்னை பயன்படுத்திக் கொள்ள சிவபெருமான் நடத்தும் நாடகம் இது.! நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே மாறி விடும் தத்துவத்தை குறிக்கும் செயலும் இதுதான்.! புரிந்து கொள்.! என பிரம்மா விளக்கமாக ௬றினார்.
அதன்படி ஆசைகளற்ற சனத்குமாரர், முருகனாக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகளாக ஆறு குழந்தைகளாக தோன்றி சரவணப் பொய்கையில் வளர்ந்து உமா தேவியால், ஒரே குழந்தையாய் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ந்து வாலிப பருவத்தில் பத்மாசூரன் முதலிய அரக்கர்களை அழித்து தேவர்களை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து, உலகையும் காத்தருளினார். இந்தக் கதை திரிபுரா ரகஸியம் என்ற கிரந்த நூலில் உள்ளதாக ௬றி முடிகிறது. 
இன்றளவும் நாம் அந்த ஆறுமுகனை, அன்று தேவர்களையும் மூவுலகையும் அரக்கர்களிடம் இருந்து காத்த முருகனை, கந்தா, கடம்பா கார்த்திகேயா, அழகா, மால்மருகா, சிவகுமரா, என்று, அகமும் புறமும் உருகி வழிபட, நம் மனதில் உருவாகும் கோபம், சூழ்ச்சி. வஞ்சகம், பொறாமை அகங்காரம், ஆணவம், போன்ற கெட்ட குணங்களாகிய அரக்கர்களை அழித்து நம் மனதில் நல்ல சிந்தனைகளை, விருட்ஷமாக வளர்ந்து தழைக்க விதைப்பவரும் அவர்தான்.
நமக்காகயாமிருக்க பயமேன்என்று ௬றியபடியே மயில் வாகனம் ஏறி உலகெங்கும் சுற்றி வந்து, புன் முறுவலுடன் வேல் கொண்டு நம் வினை தீர்க்கும் முருகனை நம் சிந்தையில் என்றும் நிலையாய் நிறுத்தி ஆனந்தமாய் வழிபடுவோமாக….!

வேலிருக்க வினையுமில்லை.! மயிலிருக்க பயமுமில்லை..!
முருகா சரணம்  முத்தமிழ் வித்தகா சரணம்.

இந்தக்கதையை முருகனின் முன்னவதாரக்கதையை படித்ததும் பகிர்ந்து கொள்ளஅவன்தான் எனக்கு ஆணையிட்டான். முருகனின் துணையால், ‘அவன்அருளினால் நான் எழுதும் பக்குவம் பெற்றேன். ஒவ்வொரு தடவையும்அவனைபற்றி நான் எழுவதை மட்டும்  பூக்களாக்கிமலர்ச்சரத்தோடு வலையில்ஏற்றிவிடுவான். மரங்கள் செடி கொடிகளுக்கு உயிர் இருந்தும் காற்றிருந்தால்தான் அசையும். அதுபோல், என் இயக்கங்களும், சிந்தனைகளும் செயல்பட்டாலும், கந்தனின் அருள் என்ற காற்றினால்தான் நானும் எழுத்துலகில் பிரேவசமானேன். இந்தப் பிறவிக்கு இதுவே போதும் கந்தா.!
முருகா, முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்.!
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்.!
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா.!
முருகன் இல்லாவிட்டால் மூவுலகும் ஏதப்பா.!  

16 comments:

  1. நம்புவோர்குக் கந்தன் நலம்தருவான் மெய்யுருகி
    கும்பிடக் கைகள் குவித்து !

    வாழ்க வளமுடன்


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் முதலில் வந்துபதிவினைப் படித்து கருத்துக்கள் தந்து வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      கந்தனின் கருணை அனைவரையும் காக்க அவனடி தினமும் தொழுது துதிக்கிறேன். நன்றி

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஓம் முருகா.

    முருகன் என் இஷ்டதெய்வம். அவரைப் பற்றி இன்று நான் படிக்க நேர்ந்தது என் பாக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் பணிவான நன்றிகள்.

      முருகனின் பக்தராகிய தாங்கள் விரைந்து வந்து அவன் அருளின் சக்தியால் எழுதப்பட்ட இந்தப் பதிவை படித்தது என் பாக்கியமும் ௬ட! .மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. முருகப்பெருமானின் முன் அவதார நிகழ்ச்சிகளை
    அழகாக, மிகவும் அழகாக
    வர்ணித்து இருக்கிரீர்கள்.

    இதுவும் முருகனின் அருள் தான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அவன் அருளின்றி இவ்வுலகில் எதுவும் நடவாது.! தங்களைப் போன்ற பதிவர்கள் என்தளம் வந்து அவன் அருளால் விளைந்த பதிவை படித்து கருத்திட செய்வதும் அவன் அருள்தான்.
      தங்களின் கருத்துரைகள் என் எழுத்தை ஊக்கமடைய செய்யும் எனவும் நம்புகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மெய் சிலிர்க்க வைக்கும் பகிர்வு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மெய் சிலிர்த்த பதிவிது என பக்தியோடு படித்து பாராட்டி, வாழ்த்துக்கள் தந்தமைக்கு முருகனின் மலர் தாள் போற்றி, தங்களுக்கு மறுபடியும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முருகனின் முன் அவதாரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவனருளால்
    நீங்கள் இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன் சகோ.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முருகனின் மெய்சிலிர்க்க வைத்த முன் அவதாரம் என மெய்மறந்து படித்து கருத்திட்டமைக்கும், அவனருளால் என் எழுத்துப் பயணம் சிறக்குமென வாழ்த்தியமைக்கும், என் பணிவான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முதலில் தாமதமான வருகைக்கு மன்னிப்பானாக முருகன்.
    முருக கடவுளைப்பற்றிய அவதாரம் அழகாக காட்சிப்படுத்தினீர்கள் அருமை சகோ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாமதமான வருகைக்கு காரணத்தை அவன் அறிவானாகையால் மன்னிப்பை ஒருபோதும் ஏற்கமாட்டான் கந்தன். மாறாக அவன் அருளை தங்களுக்கு தந்து காத்தருள்வான்.

      முருக கடவுளைப்பற்றிய அவதாரம் அழகாக இருப்பதாகக்௬றி, பாராட்டி வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.
      அனைத்தும் முருகனருளன்றி இவ்வுலகில் வேறில்லை.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வணக்கம்
    எல்லாம் பக்தி மயம்... இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பக்தி பயணத்தில் மனம் கனிந்து பயணித்து இறைவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று ஆத்மார்த்தமாய் வேண்டிய தங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. முருகன் எனக்கு மிகவும் பிடித்தமான கடவுள் ஆவார். முருகனின் பதிவு மிக அருமை சகோ.
    நானும் முருகனைப் பற்றிய வைகாசி விசாகம் என்ற பதிவு எனது வலைப்பூவில் கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் முருகன் இஷ்ட தெய்வம் என்பதையறிந்து மனம் மிகவும் மகிழ்ந்தேன் சகோதரி. அவனை துதிக்காதவர் யார்தான் இந்த உலகில்..? தாங்கள் எழுதியிருக்கும் முருகன் பதிவையும் விரைவில் கண்டிப்பாக படித்து பார்க்கிறேன் சகோதரி. நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete